About Us

தொட்டிய நாயக்கர் – இராஜகம்பள சமுதாய மக்கள் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் தவிர வெளிமாநிலங்களிலும், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வசித்துவ்ருகின்றனர். தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் முப்பெரும் பிரிவுகளான கொல்லவார், சில்லவார், தோக்கலவார் மக்கள் அனைவரையும் ஒரே குடையின்கீழ் இணைத்து, எளியமுறையில், குறைந்த செலவில் வரன் பற்றிய விபரங்களை பரிமாறிக் கொள்வதற்கு உதவிடவேண்டும் என்கிற உன்னத நோக்கில் “இராஜகம்பளத்தார் மேட்ரிமோனியல் சர்வீஸ்” என்கிற இந்த இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வலைதளத்தில் தங்களைப் பற்றிய சுயவிபரங்களை தாங்களே பதிந்துகொள்ளவும், தேவைப்படும் வேளையில் தாங்களே மாற்றிக் கொள்ளும் வகையில் "டைனமிக் பேஜ்ஜாக" வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களுக்கு பொருத்தமான, எதிர்பார்க்கும் வகையிலான வரன்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

இந்த வலைதளம் உலகெங்கும் பரவியுள்ள தொட்டிய நாயக்கர் சமுதாயபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தகுதியான, பொருத்தமான வரன்களை அடையாளம் காண உதவும் என்று நம்புகிறோம்.